
Also known as White damor
species of plant
White Damar
SPECIES
பயின் என்பது அரக்கு. பயின் மரத்தைப் பயினி (Vateria indica) என்றனர். குன்றத்துக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று பயினி.[1] நாவாய்க்கலக் கப்பலில் ஓட்டை விழும்போது பயின் என்னும் அரக்கால் ஓட்டையைப் பழங்காலத் தமிழர்கள் அடைத்தார்களாம்.[2] வயிரத்துக்குப் பட்டை தீட்டும் சிறுகாரோடன் குச்சி நுனியையும் வயிரக் கல்லையும் பயின் (அரக்கு) வைத்து இணைத்துக் குச்சியைப் பிடித்துக்கொண்டு சாணைக்கல்லில் பட்டை தீட்டுவான். இந்த வயிரக்கல் போல என்ன துன்பம் வந்தாலும் பிரியமாட்டோம் என்கின்றனர் ஒரு காதலர்.[3] பட்டை தீட்டும் வயிரக்கல் போலத் துன்புறும்போதும் தன் காதலைத் தாயிடம் கூறமுடியவில்லையே எனக் கவலைப்படுகிறாள் ஒரு தலைவி.[4] இவற்றையும் காண்க சங்ககால மலர்கள் வெளியிணைப்புகள் பயின் மலர் அடிக்குறிப்பு ↑ குறிஞ்சிப்பாட்டு 69 ↑ இதையும், கயிறும், பிணையும் இரியச் சிதையும் கலத்தைப் பயினால் திருத்தும், திசையறி நீகான் - பரிபாடல் 10-54 ↑ சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம் - அகம் 1-5, ↑ சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் நாவினேன் - அகம் 356-3,
via GBIF · Kew POWO
via Wikidata sitelinks · CC0
Discovered by embedding cosine similarity (sentence-transformers MiniLM, 384-dim).